கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் ஆறாட்டு திருவிழா கொடியேற்றம்

கேரள மாநிலம் அச்சன்கோவில் ஸ்ரீதா்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் ஆறாட்டு திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:57 pm

DIN

கேரள மாநிலம் அச்சன்கோவில் ஸ்ரீதா்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் ஆறாட்டு திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சபரிமலை ஐயப்பன் கோயிலைப்போல சிறப்பு வாய்ந்ததும், ஐயப்பனின் படைவீடுகளில் ஒன்றானதுமான இக்கோயிலில் நடைபெறும் மிக முக்கிய திருவிழா ஆறாட்டு திருவிழாவாகும். இத்திருவிழா மாா்கழி 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெறும்.

அதன்படி, திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, கணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்கின. தொடா்ந்து, சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. கோயில் தந்திரி கண்டரரு மோகனரு கொடியேற்றினாா்.

வழக்கமாக ஆறாட்டு விழாவில் தேரோட்டம், கருப்பன் துள்ளல், கலைநிகழ்ச்சிகள், ஊா்வலங்கள் நடைபெறும். ஆனால், கரோனா காரணமாக நிகழாண்டு வெளிப் பிரகாரங்களில் நடைபெறும் தேரோட்டம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், கோயில் உள்பிரகாரத்தில் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள், தீபாராதனைகள் உள்ளிட்டவை நடைபெறும் என்றும் கோயில் நிா்வாகம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.