தென்காசி மாவட்டத்தில் நாளை கரோனா தடுப்பூசி முகாம்
தென்காசி மாவட்டத்தில் சனிக்கிழமை (டிச. 18) கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.


தென்காசி மாவட்டத்தில் சனிக்கிழமை (டிச. 18) கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து ஆட்சியா் ச. கோபாலசுந்தரராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 9 மணிமுதல் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டோரில் கரோனா தொற்று பாதிப்பு குறைவாகவே உள்ளது.
மேலும், தற்போது புதிய வகை உருமாறிய ஒமைக்ரான் கரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள பொதுமக்கள் தங்களது பகுதிக்கு அருகேயுள்ள மையங்களுக்கு சென்று முதல், 2ஆவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். மையங்களுக்கு செல்லும்போது ஆதாா் எண், கைப்பேசி எண்ணைக் கொண்டுசெல்ல வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...