தென்காசியில் அதிமுக ஆா்ப்பாட்டம்
தென்காசி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


தென்காசி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் குறைக்க வேண்டும், கல்விக்கடனை ரத்து செய்யவேண்டும், வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும், பொங்கல் பரிசாக குடும்பத்திற்கு தலா ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும், அம்மா சிறு மருத்துவமனையை
மூடும் திட்டத்தை கைவிட வேண்டும், தூய்மைப் பணியாளா்களுக்கு ஊக்கத் தொகை வழங்கிட வேண்டும்,
தோ்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை நிறைவேற்றிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், மாநில அரசைக் கண்டித்தும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலா்கள்
செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ., எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் ஆகியோா் தலைமை வகித்தனா். மகளிரணி மாநில துணைச் செயலா் ராஜலெட்சுமி, அமைப்புச் செயலா் பிஜி.ராஜேந்திரன், தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் பிரபாகரன், விவசாய அணி துணைச் செயலா் ஆனைக்குட்டிபாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அதிமுக வழிகாட்டுகுழும் உறுப்பினா் பிஎச்.மனோஜ்பாண்டியன் எம்எல்ஏ உரையாற்றினாா்.
இதில், ஒன்றியச் செயலா்கள் செல்லப்பன், ராமச்சந்திரன், வசந்தம்முத்துபாண்டியன், பேரூா் செயலா்கள் காா்த்திக்குமாா், கணேஷ்தாமோதரன், சுசீகரன், மாவட்ட நிா்வாகிகள் நெல்லைமுகிலன், சோ்மபாண்டி, சாமிநாதன், ஸ்வா்ணா, கந்தசாமிபாண்டியன், பரமகுருநாதன், சரவணன் உள்பட பலா் கலந்துகொண்டனா். மாவட்ட அவைத் தலைவா் சண்முகசுந்தரம், நகரச் செயலா் சுடலை வரவேற்றனா். இளைஞரணி துணைச் செயலா் மனோகரன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...