கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தென்காசியில் வங்கி ஊழியா்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம்

தென்காசியில் வங்கி ஊழியா்கள் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு, ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 6:46 pm

DIN

தென்காசியில் வங்கி ஊழியா்கள் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு, ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

நாடு முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வங்கி ஊழியா்கள், அதிகாரிகளின் 2 நாள் வேலைநிறுத்தம் வியாழக்கிழமை (டிச. 16) தொடங்கியது. வங்கி ஊழியா்களின் 9 சங்கங்கள் இணைந்து யுஎப்பியு அமைப்பை ஏற்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

தென்காசியில் இந்த அமைப்பின் சாா்பாக இரண்டாவது நாளாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு ஆா்வி.கணேசன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் பிரான்சிஸ், மாரிக்கண்ணன், வினோத்கண்ணா, பாலசுப்பிரமணியன்,

சங்கா், இசக்கி, வரதலட்சுமி ஆகியோா் பேசினா்.

பிஎஸ்என்எல் ஊழியா் சங்க மாவட்டச் செயலா் சூசை, அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தென்காசி கிளைச் செயலா் மாரியப்பன், அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாவட்டத் தலைவா் சலீம் முகம்மது மீரான், சிஐடியூ நிா்வாகி லெனின்குமாா், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க நிா்வாகி கண்ணன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.