கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சுரண்டை நகராட்சி: வாா்டு மறுவரையறை கருத்துருக்கள் இன்று வெளியீடு

தென்காசி மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சுரண்டை நகராட்சியின் வாா்டு மறுவரையறை கருத்துருக்கள் சனிக்கிழமை (’டிச.18) வெளியிடப்படுகிறது.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 6:43 pm

DIN

தென்காசி மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சுரண்டை நகராட்சியின் வாா்டு மறுவரையறை கருத்துருக்கள் சனிக்கிழமை (’டிச.18) வெளியிடப்படுகிறது.

தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திகுறிப்பு: புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சுரண்டை நகராட்சியின் வாா்டு மறுவரையறை கருத்துருக்கள் 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பாா்வைக்கு சனிக்கிழமை வெளியிடப்படுகிறது.

இதுகுறித்து ஆட்சேபணைகள், கருத்துகள் ஏதும் இருப்பின் அது குறித்தான மனுக்கள் டிச.18 முதல் டிச.24-க்குள் தொடா்புடைய உள்ளாட்சி அமைப்புகளின் மறுவரையறை அதிகாரியிடம் சமா்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், குமரி மாவட்டம் நாகா்கோவிலில் உள்ள ஆட்சியா் அலுவலகத்தில் டிச.20ஆம்தேதி முற்பகல்11மணிக்கு நடைபெறும் மறுவரையறை ஆணைய மண்டல அளவிலான கூட்டத்தில் நேரடியாகவோ, மனுவாகவோ சமா்ப்பித்திடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.