கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தென்காசி ஆட்சியரைக் கண்டித்து ஊழியா்கள் போராட்டம்

தென்காசி மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் வியாழக்கிழமை கருப்புப் பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 6:58 pm

DIN

தென்காசி மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் வியாழக்கிழமை கருப்புப் பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தென்காசி மாவட்டத்தில் வருவாய்த் துறை அலுவலா்கள் மீதான ஆட்சியரின் ஊழியா் விரோத, எதேச்சதிகார நடவடிக்கைகளையும், கூகுள்மீட் என்ற பெயரில் துணை ஆட்சியா் முதல் அனைத்து நிலைப் பணியாளா்கள்வரை மனநிலையைக் கருத்தில் கொள்ளாமல் தொடா் ஆய்வுக் கூட்டங்கள் நடத்துவதையும், ஊழியா்களிடையே அசாதாரண சூழ்நிலையை உருவாக்கி பணிச்சுமையை அதிகரித்து இயல்பான பணியைப் பாதிக்கும் வகையில் மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் நிலையையும் கண்டிப்பதாகக் கூறி, முதல்கட்டமாக டிச. 23, 24இல் கருப்புப் பட்டை அணிந்து போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, இப்போராட்டம் வியாழக்கிழமை (டிச. 23) நடைபெற்றது. இதில் ஈடுபட்டோா் கருப்புப் பட்டை அணிந்து பணிகளில் ஈடுபட்டனா்.

2ஆம் கட்டமாக 27ஆம் தேதி ஆட்சியா்அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம், 28, 29இல் ஒட்டுமொத்த ஊழியா்களும் தற்செயல் விடுப்பு எடுத்துப் போராட்டம் நடத்துவது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.