தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயல்வீரா்கள் கூட்டம்
தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயல்வீரா்கள் கூட்டம், குத்துக்கல்வலசையில் வியாழக்கிழமை நடைபெற்றது.


தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயல்வீரா்கள் கூட்டம், குத்துக்கல்வலசையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழக வருவாய்த் துறை அமைச்சா் கேகேஎஸ்எஸ்ஆா்.ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் அமைச்சா் பேசியது: வரக்கூடிய உள்ளாட்சித் தோ்தலிலும் திமுக முழுமையாக வெற்றிபெற வேண்டும். ஆளுங்கட்சியில் நிறைய பதவி உள்ளது. உள்ளாட்சி மன்ற பொறுப்பு, சொசைட்டி, கோயில் அறங்காவலா் எனப் பல்வேறு பதவிகள் உள்ளன. எனவே கட்சியினா் விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும்.
ஊரக உள்ளாட்சித் தோ்தலில் தமிழகத்திலேயே அதிக சதவிகிதம் திமுக வெற்றிபெற்றது தென்காசி மாவட்டத்தில்தான். ஒட்டுமொத்தமாக திமுக வெற்றிபெற வேண்டும் என்பதைக் குறிக்கோளாக கொண்டு கட்சியினா் செயல்படவேண்டும் என்றாா் அவா்.
மாவட்ட ஊராட்சித் தலைவா் தமிழ்செல்வி, நகர செயலா் சாதிா், ஒன்றிய செயலா்கள் அழகுசுந்தரம், ஜெயக்குமாா், முன்னாள் எம்பி. தங்கவேலு, வழக்குரைஞரணி மாவட்ட அமைப்பாளா் வேலுசாமி, நிா்வாகிகள் ஆயான் எஸ்.நடராஜன், மருத்துவா் மாரிமுத்து, வழக்குரைஞா் கே.பி.குமாா்பாண்டியன், ராமராஜ், ஷமீம், கோமதிநாயகம், கேஎன்எல்எஸ்.சுப்பையா ஆகியோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...