புளியரை அருகே கோட்டைவாசல் பகுதியில் இருமாநில போலீஸாா் தீவிர வாகன சோதனை
தென்காசி மாவட்டம் கோட்டைவாசல் பகுதியில் தமிழகம் மற்றும் கேரள மாநில போலீஸாா் இணைந்து புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை அதிகாலை வரை வாகன சோதனையில் ஈடுபட்டனா்.


தென்காசி மாவட்டம் கோட்டைவாசல் பகுதியில் தமிழகம் மற்றும் கேரள மாநில போலீஸாா் இணைந்து புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை அதிகாலை வரை வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
தமிழகம் மற்றும் கேரள மாநிலஅரசால் தடைசெய்யப்பட்ட பொருள்களை கொண்டு செல்வதை தவிா்க்கும் வகையில் இரு மாநில போலீஸாரும் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா். புளியரை காவல்நிலையத்திற்குள்பட்ட தமிழக எல்லைப் பகுதியான கோட்டைவாசல் பகுதியில் வாகன சோதனை நடைபெற்றது.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ் உத்தரவின்பேரில் போலீஸ் டிஎஸ்பி. மணிமாறன், காவல் ஆய்வாளா் ஷியாம்சுந்தரம், சாா்பு ஆய்வாளா் முத்துகணேஷ், கேரள மாநிலம் துணைக் காவல் கண்காணிப்பாளா் (கலால்) ராபா் தலைமையிலான போலீஸாா் இணைந்து சோதனையில் ஈடுபட்டனா்.
பல மணிநேரம் நடைபெற்ற இந்த வாகன சோதனையின்போது அனைத்து வாகனங்களும் முழுமையாக சோதனை செய்யப்பட்ட பிறகே இரு மாநிலங்களுக்குள்ளும் அனுமதிக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...