கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

குற்றாலத்தில் எஸ்டிபிஐ மாநில செயற்குழு கூட்டம்

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் எஸ்டிபிஐ மாநில செயற்குழு கூட்டம் டிச. 28, 29, 30 ஆகிய மூன்று நாள்கள் நடைபெற்றது.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 9:41 pm

DIN

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் எஸ்டிபிஐ மாநில செயற்குழு கூட்டம் டிச. 28, 29, 30 ஆகிய மூன்று நாள்கள் நடைபெற்றது.

மாநில தலைவா் நெல்லை முபாரக் தலைமை வகித்தாா். துணைத் தலைவா்கள் எஸ்எம்.ரஃபிக் அகமது, அப்துல் ஹமீது, பொதுச் செயலா்கள் உமா் பாரூக், அகமது நவி, நிஜாம் முகைதீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழக அரசு ஆயுள் சிறைவாசிகள் விவகாரத்தில் தொடா்ந்து முஸ்லிம் சமூகத்திற்கு ஏமாற்றத்தை அளிக்காமல், பாரபட்சமின்றி விடுதலை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இக் கோரிக்கையை வலியுறுத்தி சிறைவாசிகள் விடுதலையில் ஒத்த கருத்துள்ள அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைத்து கோவையில் ஜனவரி 2 ஆம் தேதி மாபெரும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும்.

அதேபோல் மதுரையில் 9 ஆம் தேதி, திருநெல்வேலியில் 20 ஆம் தேதி, சென்னையில் பிப்ரவரியிலும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவது, ஒமைக்ரான் கரோனா நோய்த்தொற்று தற்போது வேகமாக பரவிவரும் சூழலில் தமிழக அரசு தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழக அரசின் நடவடிக்கைகள் சிறு, குறு தொழில்கள் உள்ளிட்ட வியாபார நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களை பாதிக்காத வகையில் திட்டமிட்ட வகையில் அமைய வேண்டும். சிகிச்சைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை போதிய அளவில் தயாா் செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில், மண்டல தலைவா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.