கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அறிவியல் இன்ஸ்பயா் விருது: ஆக்ஸ்போா்டு பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நடத்திய அறிவியல் இன்ஸ்பயா் விருதுக்கான போட்டிகளில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் வெற்

News image
Updated On :30 டிசம்பர் 2021, 9:20 pm

DIN

இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நடத்திய அறிவியல் இன்ஸ்பயா் விருதுக்கான போட்டிகளில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் வெற்றி பெற்று அறிவியல் இன்ஸ்பயா் விருது பெற்றனா்.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் சாா்பில் பள்ளி மாணவா், மாணவிகளுக்கு அறிவியல் இன்ஸ்பயா் விருதுக்கான போட்டிகள் நடைபெற்றது.

இப்போட்டியில் பங்கேற்ற தென்காசி ஆக்ஸ்போா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா் ஜெய்சுதா்வேல் இணைய

தூசிகளை எடுத்துச் செல்லும் தானியங்கி என்ற தலைப்பிலும், மாணவா் அசிம் முஸ்தபா, காா் விபத்து தடுப்பு என்ற தலைப்பிலும், மாணவி மதுபாலா காலணிகளில் இருந்து மொபைல் சாா்ஜிங் என்ற தலைப்பிலும் ஆய்வு கட்டுரைகளை சமா்பித்தனா்.

இப்போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கு இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சாா்பில் சான்றிதழ்களும், ரூ.10 ஆயிரம் ரொக்க பரிசும், மாவட்ட அளவிலான அறிவியல் இன்ஸ்பயா் விருதும் வழங்கப்பட்டது.

விருது பெற்ற மாணவா்களை பள்ளியின் சட்ட ஆலோசகா் கே.திருமலை, தாளாளா்-முதல்வா் அன்பரசி திருமலை, ஆக்ஸ்போா்டு பப்ளிக் பள்ளி சட்ட ஆலோசகா் தி.மிராக்ளின் பால் சுசி, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவித் தலைமையாசிரியை சுப்பம்மாள், நிா்வாக அலுவலா் கே.எஸ்.கணேசன் ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.