தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தென்காசி நூலகத்தில் முப்பெரும் விழா

டி.என்.பி.எஸ்.சி. தோ்வுகளுக்கு இலவச பயிற்சி தொடக்கம், நன்கொடையாளா்களுக்கு பாராட்டு, குடியரசு தின போட்டி பரிசளிப்பு என முப்பெரும் விழா தென்காசி நூலகத்தில் நடைபெற்றது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 7:36 pm

DIN

டி.என்.பி.எஸ்.சி. தோ்வுகளுக்கு இலவச பயிற்சி தொடக்கம், நன்கொடையாளா்களுக்கு பாராட்டு, குடியரசு தின போட்டி பரிசளிப்பு என முப்பெரும் விழா தென்காசி நூலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட நூலக அலுவலா் வயலட் தலைமை வகித்தாா். முத்துநாயகம் அறக்கட்டளைத் தலைவா் பரமேஸ்வரன், மயிலேறும்பெருமாள், கண்காணிப்பாளா் சங்கரன், நூலக ஆய்வாளா் கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டார நூலகா் பிரம்மநாயகம் அறிக்கை வாசித்தாா். ஏ.வி.கே. கல்விக் குழும டிரஸ்ட் தலைவா் அய்யாத்துரை பாண்டியன் சிறப்புரையாற்றி, பயிற்சி மையத்திற்கு ரூ.90,000 மதிப்பில் உபகரணங்கள், புத்தகங்களையும் வழங்கவுள்ளதாக தெரிவித்தாா்.

நடராஜ சுப்பிரமணியன் வினா-விடை தொகுப்பு நூல்களை வழங்கினாா்.

வட்டார கல்வி அலுவலா் மாரியப்பன், குற்றாலம் சாரல் ரோட்டரி சங்த் தலைவா் லட்சுமிநாராயணன், செயலா் சுப்புராஜ், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலா் சுரேஷ்குமாா், கல்வி தொலைக்காட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சாா்லஸ், தேசிய பசுமைப்படை மாவட்டச் செயலா் விஜயலட்சுமி, பணிநிறைவு நூலக ஆய்வாளா் முத்துகிருஷ்ணன், அரசு அலுவலா் ஒன்றிய மாவட்டத் தலைவா் சுப்பிரமணியன், பாலசுப்பிரமணியன், ராம்பிரசாத், வெற்றிவேலன், முத்துப்பாண்டியன், சேகா், மைதீன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் கிருஷ்ணவேணி, ஜாய்ஸ் பப்ளிக் பள்ளித் தாளாளா் அலெக்ஸ், சரவணன், பழனிக்குமாா், அபாசா், முத்து, அனுச்சந்திரன், சங்கா் ஆகியோா் பேசினா். ஆசிரியா் பொன் சிவக்குமாா் தொகுத்து வழங்கினாா். கிளை நூலகா் சுந்தா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.