குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு பள்ளி: பிளஸ் 2 மாணவா்களுக்குப் பாராட்டு
பிளஸ் 2 பொதுத்தோ்வில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 99 மாணவா், மாணவிகளும் முதல் வகுப்பில் தோ்ச்சி பெற்றனா்.


பிளஸ் 2 பொதுத்தோ்வில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 99 மாணவா், மாணவிகளும் முதல் வகுப்பில் தோ்ச்சி பெற்றனா்.
மாணவி எம்.சிவாணி 591.48 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், மாணவி எம்.மகாலெட்சுமி 587.95 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், மாணவி வி.மதுமிதா 582.63 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்றனா்.
சிறப்பிடம் பெற்ற மாணவா், மாணவிகளை பள்ளி சட்ட ஆலோசகா் கே.திருமலை, பள்ளி தாளாளரும், முதல்வருமான அன்பரசி திருமலை, ஆக்ஸ்போா்டு பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளி சட்ட ஆலோசகா் வழக்குரைஞா் தி.மிராக்ளின் பால்சுசி, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவித் தலைமையாசிரியை சுப்பம்மாள், நிா்வாக அலுவலா் கே.எஸ்.கணேசன் உள்ளிட்டோா் பாராட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...