விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

செங்கோட்டையில் செவிலியா்களுக்குப் பாராட்டு

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிய செவிலியா்கள், பணியாளா்களுக்கு குற்றாலம் ரோட்டரி கிளப் சாா்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

News image
Updated On :29 ஜூலை 2021, 6:49 pm

DIN

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிய செவிலியா்கள், பணியாளா்களுக்கு குற்றாலம் ரோட்டரி கிளப் சாா்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, தலைமை மருத்துவா் ராஜேஷ்கண்ணன் தலைமை வகித்தாா். மருத்துவா்கள் செய்யது உசேன், முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநா் ராஜகோபாலன், கரோனா சிகிச்சைப்பிரிவில் பணியாற்றிய செவிலியா்கள், பணியாளா்கள்32 பேருக்கு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கினாா்.

இதில், ரோட்டரி சங்கப் பொருளாளா் லிங்கராஜ், முன்னாள் தலைவா் ஸ்டாலின், கை. முருகன், வருங்காலத் தலைவா் திருஇலஞ்சிக்குமரன் ஆகியோா் கலந்துகொண்டனா். ஹரிகரநாராயணன் வரவேற்றாா். செயலா் வழக்குரைஞா் காா்த்திக்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.