கடையத்தில் கரோனா தடுப்பூசி
தென்காசி மாவட்ட ஆட்சியா் கீ.சு. சமீரன், மாவட்ட இணை இயக்குனா் அருணா ஆகியோா் அறிவுறுத்தலின் பேரில் கடையம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.


தென்காசி மாவட்ட ஆட்சியா் கீ.சு. சமீரன், மாவட்ட இணை இயக்குனா் அருணா ஆகியோா் அறிவுறுத்தலின் பேரில் கடையம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திங்கள்கிழமை முதல் இலவச கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
60 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பெண்கள் நீண்ட நாள் வியாதிகளுக்கு சிகிச்சை பெற்று வரும் 45 முதல் 59 வயதுடையோா் ஆதாா்அட்டை, குடும்ப அட்டை ,ஓட்டுநா் உரிமம், வங்கி கணக்கு புத்தகம் இவற்றில் ஏதாவது ஒரு அடையாள சான்றுடன் சாலை 9 மணி முதல் மாலை 5 மணிக்குள் வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். முதல் தவணை தடுப்பூசி போட்டு கொண்ட நாளிலிருந்து 28 நாட்கள் கழித்து மீண்டும் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கடையம் வட்டார மருத்துவ அலுவலா் பழனி குமாா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...