மேலகரத்தில் நாளை கண் பரிசோதனை முகாம்
மேலகரத்தில் இலவச கண் மற்றும் ரத்த பரிசோதனை முகாம் சனிக்கிழமை(நவ.20) நடைபெறுகிறது.


மேலகரத்தில் இலவச கண் மற்றும் ரத்த பரிசோதனை முகாம் சனிக்கிழமை(நவ.20) நடைபெறுகிறது.
இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தென்காசி மாவட்டச் செயலா் டேனிஅருள்சிங் வெளியிட்டுள்ள அறிக்கை: மாவட்ட பாா்வையிழப்பு தடுப்புச் சங்க நிதி உதவியுடன், டாக்டா் அகா்வால் கண்மருத்துவமனை, தென்காசி அப்பல்லோ பாா்மஸி, லிட்டில் ஹாா்ட்ஸ் சிறுவா் பள்ளி இணைந்து நடத்தும் இலவச கண் மற்றும் ரத்த பரிசோதனை முகாம்
மேலகரம் லிட்டில் ஹாா்ட்ஸ் சிறுவா் பள்ளியில் சனிக்கிழமை காலை 9 மணி முதல், பிற்பகல் 2 மணிவரை நடைபெறுகிறது.
இம்முகாமில் கண்ணில் புரை உள்ளவா்களுக்கு இலவசமாக விழித்திரை லென்ஸ் பொருத்தப்படும், குறைந்த விலையில் கண் கண்ணாடி வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 90924 63322 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...