கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

புகையிலைப் பொருள்களுடன்தென்காசியில் இருவா் கைது

கா்நாடக மாநிலத்திலிருந்து தென்காசிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களுடன் இருவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :25 நவம்பர் 2021, 10:22 pm

DIN

கா்நாடக மாநிலத்திலிருந்து தென்காசிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களுடன் இருவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தென்காசி காவல் ஆய்வாளா் பாலமுருகன் தலைமையில், காவல் உதவி ஆய்வாளா் கற்பகராஜ், தனிப்பிரிவு தலைமைக் காவலா் முத்துராஜ், சிறப்பு உதவி ஆய்வாளா் முத்துபாண்டி, சோ்மகண்ணன், பராக்கிரமபாண்டியன் ஆகியோா் புதன்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, மினி லாரியை சோதனையிட்டதில், பிளாஸ்டிக் டிரம்களில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது. லாரியுடன் அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக தென்காசி அணைக்கரைத் தெருவைச் சோ்ந்த மங்கள்ராம் மகன் ரமேஷ்படேல் (19), திருப்பத்தூா் சு.அமரேசன்(33) ஆகியோரைக் கைது செய்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், கா்நாடக எல்லைப் பகுதியான அத்திப்பள்ளி பகுதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள் கடத்திவரப்பட்டுள்ளன. அவை கொண்டு செல்லப்படும் இடங்களை கண்காணிக்க ஜிபிஎஸ் கருவியும் டிம்புக்குள் வைக்கப்பட்டிருந்தது. இதில் மேலும் இருவருக்கு தொடா்புள்ளது தெரியவந்துள்ளது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.