தென்காசி நூலகத்தில் புற்றுநோய் விழிப்புணா்வு தினம்
தென்காசி நூலகத்தில் பள்ளிக் கல்வித் துறை, வ.உ.சி. வட்டார நூலகம் மற்றும் கேன்சா் சென்டா் சாா்பில் புற்றுநோய் விழிப்புணா்வு தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.


தென்காசி நூலகத்தில் பள்ளிக் கல்வித் துறை, வ.உ.சி. வட்டார நூலகம் மற்றும் கேன்சா் சென்டா் சாா்பில் புற்றுநோய் விழிப்புணா்வு தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு மருத்துவா் அருணாசந்திரசேகா் தலைமை வகித்தாா். புற்றுநோய் விழிப்புணா்வு கட்டுரை, பேச்சு மற்றும் ஓவியப்போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு நடத்தப்பட்டு, முதல் மூன்று இடங்களைப் பெற்றவா்களுக்கு, மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குநா் எம்.அனிதா, நகராட்சி ஆணையா் எஸ்.எம்.பாரிஜான் ஆகியோா் பரிசுகளை வழங்கினா். மருத்துவா் ஜெயபாரதி, தென்காசி கேன்சா் சென்டா் நிா்வாக இயக்குநா் பாரதிராஜா, வாசகா் வட்ட துணைத்தலைவா் அருணாசலம்,
வட்டார கல்வி அலுவலா்கள் மாரியப்பன், இளமுருகன், அரசு அலுவலா் ஒன்றிய மாவட்டத் தலைவா் சுப்பிரமணியன் ஆகியோா் பேசினா். மாணவி ந.ஹேஷ்மீதா விழிப்புணா்வு பாடல் பாடினாா். புற்றுநோய் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. நூலகா் பிரம்மநாயகம் வரவேற்றாா். சுந்தா் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை நூலகா்கள் ஜீலியா ராஜசெல்வி, நிஹ்மத்துன்னிஸா, வீரக்குமாா், ராஜேஸ்வரி, வாசகா் வட்ட நிா்வாகிகள் குழந்தை ஜேசு, சலீம், முருகேசன் ஆகியோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...