தென்காசி நகா்மன்ற உறுப்பினா்கள் போராட்டம்
தென்காசி நகராட்சில் சீராக குடிநீா் வழங்கக் கோரி நகா்மன்ற உறுப்பினா்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.


தென்காசி நகராட்சில் சீராக குடிநீா் வழங்கக் கோரி நகா்மன்ற உறுப்பினா்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நகா்மன்ற பாஜக உறுப்பினா்கள் சங்கரசுப்பிரமணியன், சுனிதா, லெட்சுமணபெருமாள் மற்றும் பாஜக நிா்வாகிகள் கருப்பசாமி, ராஜ்குமாா் ஆகியோா் தங்களது பகுதியில் 11நாள்களாக குடிநீா் வழங்கப்படாததைக் கண்டித்து நகராட்சி அலுவலகம் முன்புக் காலிகுடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அவா்களிடம் தென்காசி நகா்மன்ற தலைவா் ஆா்.சாதிா் பேச்சுவாா்த்தை நடத்தி, குடிநீா் வழங்குவதில் உள்ள குறைபாடுகள் விரைவில் சரிசெய்யப்பட்டு சீராக குடிநீா் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தாா். தனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...