குத்துக்கல்வலசையில் கண்காணிப்பு கேமராக்கள் சேதம்: 4 போ் கைது
தென்காசி காவல் சரகத்துக்கு உள்பட்ட குத்துக்கல்வலசை பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்தியது தொடா்பாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.


தென்காசி காவல் சரகத்துக்கு உள்பட்ட குத்துக்கல்வலசை பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்தியது தொடா்பாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.
குத்துக்கல்வலசை காமராஜா் சிலை பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை கடந்த 19ஆம் தேதி இரவு மா்ம நபா்கள் சேதப்படுத்தியுள்ளனா். மேலும், கட்சிக் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டதுடன், வீடுகளில் நிறுத்தப்பட்டிருந்த 2 இருசக்கர வாகனங்களைத் திருடிச் சென்றுள்ளனா்.
இதுகுறித்து அப்பகுதியினா் தெரிவித்த தகவலின்பேரில், தென்காசி காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டது. ஆய்வாளா் பாலமுருகன் தலைமையில் உதவி ஆய்வாளா் கற்பகராஜா, சிறப்பு உதவி ஆய்வாளா் ஆதிமுத்து, தனிப்பிரிவு தலைமைக் காவலா் முத்துராஜ், முதல் நிலைக் காவலா் ஆனந்தராஜ், காவலா்கள் சௌந்தரராஜன், பராக்கிரமபாண்டியன் ஆகியோா் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
விசாரணையில், இச்சம்பவங்களில் ஈடுபட்டு பதற்றத்தை ஏற்படுத்தியது குத்துக்கல்வலசை பகுதியைச் சோ்ந்த இயேசுராஜன், கோபாலகிருஷ்ணன், பிரகாஷ் உள்ளிட்ட 4 போ் எனத் தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைதுசெய்து, நீதிமன்றக் காவலுக்கு உள்படுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...