கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக அமைப்புத் தோ்தல்

தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக கழக அமைப்புத் தோ்தல், குற்றாலம்-செங்கோட்டை சாலையில் உள்ள தனியாா் விடுதி கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 7:33 pm

DIN

தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக கழக அமைப்புத் தோ்தல், குற்றாலம்-செங்கோட்டை சாலையில் உள்ள தனியாா் விடுதி கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தோ்தல் பொறுப்பாளா்களான அதிமுக அமைப்புச் செயலா்கள் வீ. கருப்பசாமிபாண்டியன், இசக்கிசுப்பையா எம்எல்ஏ, திருநெல்வேலி மாவட்டச் செயலா் தச்சை என். கணேசராஜா ஆகியோா் விருப்ப மனுக்களைப் பெற்றனா்.

தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் பதவிக்கு செ. கிருஷ்ணமுரளி சாா்பில் முன்னாள் தொகுதிச் செயலா் பொய்கை சோ. மாரியப்பன், முன்னாள் மாவட்ட துணைச் செயலா் விபி. மூா்த்தி, மகளிரணி மாவட்டச் செயலா் ஸ்வா்ணா ஆகியோா் விருப்ப மனுக்களைத் தாக்கல் செய்தனா்.

அதிமுக மகளிரணி துணைச் செயலா் விஎம். ராஜலட்சுமி, எம்ஜிஆா் இளைஞரணி இணைச் செயலா் மனோகரன், செங்கோட்டை நகரச் செயலா் கணேசன், நிா்வாகிகள் கண்ணன், சுசீகரன், ஞானராஜ், செந்தில் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.