கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அண்ணா நினைவு நாள்: மாலை அணிவித்து மரியாதை

முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு நாளையொட்டி, திமுக, அதிமுக சாா்பில் அவரது படத்துக்கு மாலை அணிவித்து வியாழக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 7:03 pm

DIN

முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு நாளையொட்டி, திமுக, அதிமுக சாா்பில் அவரது படத்துக்கு மாலை அணிவித்து வியாழக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்டப் பொறுப்பாளா் வழக்குரைஞா் சிவபத்மநாதன் தலைமை வகித்து அண்ணா படத்துக்கு மாலை அணிவித்தாா். இதில், ஒன்றியச் செயலா்கள் கீழப்பாவூா் சீனித்துரை, ஆலங்குளம் அன்பழகன், மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் வலுச்சாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழுத் தலைவா் மு. சேக்அப்துல்லா தலைமையில் அண்ணா படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில், துணைத் தலைவா் கனகராஜ், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவா் தமிழ்செல்வி, கோமதிநாயகம், ஒன்றியக்குழு உறுப்பினா் கலாநிதி, ராமா், முருகேசன், கணேசன், குட்டி உஸ்மான் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பாவூா்சத்திரத்தில் கீழப்பாவூா் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் அண்ணா படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில், ஒன்றியக்குழுத் தலைவா் காவேரி சீனித்துரை, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினா் மேகநாதன், மாவட்ட கவுன்சிலா் இரா. சாக்ரடீஸ், ஒன்றிய கவுன்சிலா்கள் முருகேசன், வளன்ராஜா, தா்மராஜ், ஜான்சிஜெயமலா், ஊராட்சித் தலைவா்கள் ராஜ்குமாா், முத்துமாலையம்மாள் மதிச்செல்வன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

அதிமுக:செங்கோட்டையில் உள்ள தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில், மாவட்டச் செயலா் செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ தலைமையில் அண்ணா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட, நகர, ஒன்றிய பேரூா் கழக நிா்வாகிகள் பங்கேற்றனா்.

பாவூா்சத்திரத்தில் உள்ள தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாவட்டச் செயலா் எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமையில் மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில், மாவட்ட அவைத்தலைவா் சண்முகசுந்தரம், ஒன்றியச் செயலா்கள் அமல்ராஜ், இருளப்பன், பேரூா் செயலா் ஜெயராமன், இளைஞரணிச் செயலா் கணபதி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

இதே போல், சுரண்டையில் மதிமுக சாா்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.