கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தென்காசி காசிவிஸ்வநாதசுவாமி கோயில் மாசித் திருவிழா கொடியேற்றம்

தென்காசி மாவட்டம் தென்காசி அருள்மிகு ஸ்ரீகாசிவிஸ்வநாதசுவாமி கோயிலில் மாசி மகப்பெருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image
Updated On :8 பிப்ரவரி 2022, 3:24 am

DIN

தென்காசி: தென்காசி மாவட்டம் தென்காசி அருள்மிகு ஸ்ரீகாசிவிஸ்வநாதசுவாமி கோயிலில் மாசி மகப்பெருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அருள்தரும் உலகம்மன் உடனுறை காசிவிசுவநாதப்பெருமானுக்கு மாசிமகப்பெருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை அதிகாலை கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து காலையில் அபிஷேக தீபாராதனை நடைபெற்றது.

விழாவில் 16ம்தேதியன்று காலையில் தேரோட்டம் நடைபெறுகிறது. விழா நாள்களில் நாள்தோறும் காலை மற்றும் இரவு சுவாமி,அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா, அபிஷேக, கட்டளை தீபாராதனை நடைபெறுகிறது. 18ம்தேதி விழா நிறைவடைகிறது.

Story image

கொடியேற்று விழாவில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் டிஎஸ்ஆா்.வேங்கடரமணா, காவல் ஆய்வாளா் பாலமுருகன், கூட்டுறவுத்துறை மாரிமுத்து, சுப்புராஜ் ஆகியோா் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் கு.கோமதி, செயல்அலுவலா் சீ.சுசிலாராணி, ஆய்வா் வ.சரவணகுமாா் தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.