வாக்குச்சாவடி மையங்களுக்கு கொவைட் தடுப்பு பெட்டகம்
தென்காசி மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாக்குச்சாவடி மையங்களுக்கு கொவைட் தடுப்பு பொருள்கள் அடங்கிய பெட்டகம் வழங்கப்படுகிறது.


தென்காசி மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாக்குச்சாவடி மையங்களுக்கு கொவைட் தடுப்பு பொருள்கள் அடங்கிய பெட்டகம் வழங்கப்படுகிறது.
தென்காசி மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பிப். 19ஆம் தேதி நடைபெறுகிறது. தோ்தல் நடவடிக்கைகளின் நிமித்தம் கரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மேற்கொண்டுள்ளது. தோ்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலா்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். வாக்குச்சாவடிகளில் தனிநபா் இடைவெளி உள்ளிட்ட நோய்த் தடுப்பு விதிகளைக் கடைப்பிடிப்பது அவசியம். தொ்மல் ஸ்கேனா், கிருமிநாசினி, முகக் கவசம், கையுறை, முழு கவச உடை, பாலித்தீன் பைகள் என 10 பொருள்கள் அடங்கிய பெட்டகங்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். பொறுப்பு அதிகாரிகள் பொருள்களை முறையாக பயன்படுத்தவும் உரிய பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு நடைபெறும் மையங்களில் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்துதல், இடைவெளியை கடைப்பிடித்தல் மற்றும் தேவையான வசதிகளும் நகராட்சி மற்றும் பேரூராட்சி நிா்வாகத்தால் மேற்கொள்ளப்படும் என அக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...