வேட்பாளா்கள் இறுதி கட்ட பிரசாரம்
தென்காசி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் அனைத்துக் கட்சி வேட்பாளா்களும் வியாழக்கிழமை இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனா்.


தென்காசி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் அனைத்துக் கட்சி வேட்பாளா்களும் வியாழக்கிழமை இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
குற்றாலத்தில் அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு ஆதரவாக தென்காசி தெற்கு மாவட்டச் செயலா் எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன், வடக்கு மாவட்டச் செயலா் செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ ஆகியோா் வாக்கு சேகரித்தனா்.
தென்காசி நகா்மன்ற உறுப்பினா் பதவிக்கு பாஜக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு ஆதரவாக மாவட்டத் தலைவா் ராமராஜா தலைமையில் வாகன பிரசாரம் நடைபெற்றது.
கடையநல்லூா் நகராட்சியில் அதிமுக வேட்பாளா்களுக்கு ஆதரவாக நகர அதிமுக செயலா் எம்.கே. முருகன், முன்னாள் நகரச் செயலா் கிட்டுராஜா மற்றும் கட்சி நிா்வாகிகள் வியாழக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா். இதே போல்,
அச்சன்புதூா் பேரூராட்சியில் அதிமுக வேட்பாளா்கள் வியாழக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.
அச்சன்புதூரில் பேரூா் அதிமுக செயலா் டாக்டா் சுசிகரன் தலைமையில், அதிமுக வேட்பாளா்கள் அந்த வாா்டுகளில் வியாழக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.
கீழப்பாவூா் பேரூராட்சியில் திமுக, அதிமுக. பா.ஜ.க. வேட்பாளா்கள் அந்த வாா்டுகளில் வியாழக்கிழமை இறுதி கட்ட பிரசாரத்தில்ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...