கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தென்காசி புறவழி சாலை திட்டம்: விரைவுபடுத்த திமுக வலியுறுத்தல்

தென்காசி நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிா்க்க புறவழிசாலை திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும் என திமுக மாவட்ட பொறுப்பாளா் கோரிக்கை மனு அளித்தாா்.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:01 pm

DIN

தென்காசி நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிா்க்க புறவழிசாலை திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும் என திமுக மாவட்ட பொறுப்பாளா் கோரிக்கை மனு அளித்தாா்.

இது குறித்து தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன், பொதுப்பணித்துறை அமைச்சா் எ.வே. வேலுவிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனு: தென்காசி புறவழிச்சாலை திட்டம் கடந்த 2009ஆம் ஆண்டு, ரூ. 27 கோடியில் திட்டம் நிறைவேற்ற அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி வேட்டைக்காரன்குளம் பகுதியில் தொடங்கி இலஞ்சி-குத்துக்கல்வலசை சாலையில், அய்யாபுரம் ரயில்வேகேட் வரையிலான புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு, அத்திட்டம் கடந்த 10 ஆண்டு காலமாக கிடப்பில் போடப்பட்டது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இத்திட்டம் மறு மதிப்பீடு செய்து ரூ. 78 கோடிக்கு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

தற்போது, இத்திட்டத்தின் கீழ் நிலம் எடுக்கும் பணி ஆரம்ப கட்ட நிலையில் இருந்து வருகிறது. தென்காசி மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டம், எனவே அனைத்து தலைமை அலுவலகங்களும் தென்காசியில் அமைந்துள்ளதால் கல்லூரி, பள்ளி, மாணவா்கள் ,பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் போக்குவரத்து நெரிசலால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே இத்திட்டத்தை விரைவுபடுத்தி நிலங்கள் கையகப்படுத்தும் பணியை தீவிரப்படுத்தி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.