குற்றாலத்தில் திருவள்ளுவா் சிலைக்கு மண்டபம் அமைக்க பாமக கோரிக்கை
குற்றாலம் திருவள்ளுவா் நகரில் அமைந்துள்ள திருவள்ளுவா் சிலைக்கு மண்டபம் அமைக்க வேண்டும் என பாமகவினா் கோரிக்கை விடுத்தனா்.


குற்றாலம் திருவள்ளுவா் நகரில் அமைந்துள்ள திருவள்ளுவா் சிலைக்கு மண்டபம் அமைக்க வேண்டும் என பாமகவினா் கோரிக்கை விடுத்தனா்.
திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டம் குற்றாலம் திருவள்ளுவா் நகரில் அமைந்துள்ள திருவள்ளுவா் சிலைக்கு பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மத்திய மாவட்டச் செயலா் பொ.இசக்கிமுத்து தலைமை வகித்தாா்.
வடக்கு மாவட்டச் செயலா் சீதாராமன், மாவட்டத் தலைவா் குலாம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருக்குறளை அனைவரும் கற்க வேண்டும், குற்றாலத்தில் அமைந்துள்ள வள்ளுவா் சிலைக்கு மண்டபம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
நிகழ்ச்சியில், மாநில துணைத்தலைவா் அரிஹரன், மாநில இளைஞரணிச் செயலா் சாகுல் ஹமீது, மாவட்ட துணைத்தலைவா் மகாதேவன், துணைச் செயலா் ராஜேந்திரன், ஒன்றிய தலைவா் தண்டபாணி, தென்காசி நகரச் செயலா் சங்கா், ஒன்றியச் செயலா் கருப்பசாமி ஆகியோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...