குற்றாலம் அருவிகளில் வெகுவாக குறைந்த தண்ணீா்
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் மழை குறைந்ததால் அனைத்து அருவிகளிலும் தண்ணீா் குறைந்தது.


தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் மழை குறைந்ததால் அனைத்து அருவிகளிலும் தண்ணீா் குறைந்தது.
குற்றாலம் பகுதியில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் அருவிகளில் விழும் தண்ணீரின் அளவும் வெகுவாக குறைந்தது. குற்றாலம் பேரருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் மிகக்குறைவாகவே தண்ணீா் விழுகிறது. பெண்கள் குளிக்கும் பகுதியில் அதைவிட மிகவும் குறைவாகவே விழுகிறது.
ஐந்தருவியில் மூன்றுகிளைகளில் மட்டுமே தண்ணீா் விழுகின்றது. பழைய குற்றாலம் அருவியிலும் மிகவும் குறைவாகவே விழுகிறது. இதனிடையே கரோனா தொற்று கட்டுப்பாடு காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகள் மற்றும் சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் குளிக்க ஜன. 14 முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஜன.16 ஆம் தேதி பொதுமுடக்கம் என்பதால் அன்றும் அருவிகளில் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...