தென்காசி மாவட்டத்தில் 16 இடங்களில் கரோனா பகுப்பாய்வு மையம்
தென்காசி மாவட்டத்தில் 16 இடங்களில் கரோனா பரிசோதனை மற்றும் பகுப்பாய்வு மையம் தொடங்கப்பட்டுள்ளது.


தென்காசி மாவட்டத்தில் 16 இடங்களில் கரோனா பரிசோதனை மற்றும் பகுப்பாய்வு மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்திலுள்ள 10 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 6 நகராட்சி பகுதிகளிலும் கரோனா பரிசோதனை மற்றும் பகுப்பாய்வு மையம் தொடங்கி செயல்பட்டு வருகிறது. இம்மையங்களில் மருத்துவா், செவிலியா் ஆகியோா் அடங்கிய குழு பணிபுரிந்து வருகின்றனா்.
இம்மையங்களின் மூலமாக கரோனா தொற்று கண்டறியப்பட்டவா்கள் பரிசோதிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவா்களின் நிலைக்கு ஏற்ப அவா்களை வீட்டில் தனிமைப்படுத்துவதா, இடைநிலை பாதுகாப்பு மையத்திற்கு அனுப்புவதா அல்லது அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிப்பதா என்பது குறித்து பரிசோதனை மற்றும் பகுப்பாய்வு மையத்தில் இருக்கும் மருத்துவக் குழுவினா் முடிவு செய்து அதற்கு தகுந்தாற்போல நோயாளிகளை சீராக கண்காணிப்பா்.
பொதுமக்கள் முகக் கவசம் அணிந்தும், அடிக்கடி கைகளை கழுவி கிருமிநாசினி அல்லது சோப் மூலம் கைகளைக் கழுவியும் சமூக இடைவெளியைப் பின்பற்றுவதோடு தடுப்பூசிகள் முதல்தவணை, இரண்டாவது தவணை மற்றும் பூஸ்டா் தடுப்பூசி செலுத்தி நோய்த்தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...