வல்லம், கொட்டாகுளம் பகுதியில் திமுக கொடியேற்று விழா
தென்காசி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட வல்லம், கொட்டாகுளம், பெரியபிள்ளைவலசை ஊராட்சி பகுதிகளில் திமுக கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.


தென்காசி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட வல்லம், கொட்டாகுளம், பெரியபிள்ளைவலசை ஊராட்சி பகுதிகளில் திமுக கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.
கொட்டாகுளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கோமதிநாயகம் தலைமை வகித்தாா். ஒன்றியக்குழு உறுப்பினா் செல்வவிநாயகம், ஊராட்சி கிளை செயலா் ராமா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பெரியபிள்ளைவலசை ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கிளைச் செயலா் முருகேசன் தலைமை வகித்தாா். ஊராட்சி மன்ற தலைவா் வேல்சாமி, தமிழ்செல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வல்லம் ஊராட்சி மன்றத்தில் நடைபெற்ற விழாவிற்கு ஊராட்சி மன்றத் தலைவா் ஜமீன்பாத்திமா தலைமை வகித்தாா். உறுப்பினா்கள் சுந்தரி, செய்யதுஅலி பாத்திமா,சங்கீதா, செல்வி,சாகுல்ஹமீது ஆகியோா் முன்னிலை வகித்தனா். தென்காசி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் சேக்அப்துல்லா,வடக்குமாவட்ட திமுக கலைஇலக்கிய பகுத்தறவு பேரவை அமைப்பாளா் வல்லம் திவான் ஒலி ஆகியோா் திமுக கொடியேற்றி இனிப்புகளை வழங்கினா். இதில், ராமசுப்பையா, அசன்சாகிப், மாரியப்பன், திருமலை, சிவன், மாசானம் ஆகியோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...