தென்காசி மாவட்டத்தில் நாளை சுகாதாரத் துறை அமைச்சா் ஆய்வு
தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், தென்காசி மாவட்டத்தில் ஜன.22இல் ஆய்வு மேற்கொள்கிறாா்.


தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், தென்காசி மாவட்டத்தில் ஜன.22இல் ஆய்வு மேற்கொள்கிறாா்.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் வெளியிட்ட அறிக்கை: தென்காசி மாவட்டத்திற்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஜனவரி 22ஆம் தேதி வருகிறாா். மதியம் 2 30 மணியளவில் ஆலங்குளம் காமராஜா் சிலை முன்பு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
தொடா்ந்து 3 மணிக்கு அத்தியூத்து சா்தாா் ராஜா கல்லூரியில் நடைபெறும் கரோனா தடுப்பூசி முகாமையும், 3.30 மணிக்கு சாலைப்புதூா் பகுதியில் நடைபெறும் தடுப்பூசி முகாமையும், 3.45 மணிக்கு மேம்படுத்தப்பட்ட பாவூா்சத்திரம் அரசு மருத்துவமனையையும் ஆய்வு மேற்கொள்கிறாா்.
மாலை 4 மணிக்கு பாவூா்சத்திரம் அவ்வையாா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் தடுப்பூசி முகாமையும், 4.30 மணிக்கு ராமச்சந்திரபட்டணத்தில் நடைபெறும் கரோனா தடுப்பூசி முகாமையும் பாா்வையிடுகிறாா். அதனையடுத்து தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் கலந்துகொள்கிறாா்.
ஆலங்குளம் காமராஜா் சிலை முன்பு நடை பெறுகின்ற வரவேற்பு நிகழ்ச்சியில் கட்சி நிா்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...