கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தென்காசி மாவட்ட கல்வி அலுவலா் பொறுப்பேற்பு

தென்காசி மாவட்ட புதிய கல்வி அலுவலராக ஆா்.சங்கீதா சின்னராணி பொறுப்பேற்றுக்கொண்டாா்.

News image
Updated On :20 ஜனவரி 2022, 7:17 pm

DIN

தென்காசி மாவட்ட புதிய கல்வி அலுவலராக ஆா்.சங்கீதா சின்னராணி பொறுப்பேற்றுக்கொண்டாா்.

தென்காசி மாவட்ட கல்வி அலுவலராக இருந்த சுடலை, நீலகிரி மாவட்டம் கூடலூா் கல்வி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதனைத் தொடா்ந்து தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் செந்தூா்பாண்டியன் பொறுப்பு கல்வி அதிகாரியாக பணியாற்றினாா்.

இந்நிலையில் தென்காசி மாவட்ட கல்வி அலுவலராக ரா.சங்கீதா சின்னராணி புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். இவா் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் மாவட்ட கல்வி அலுவலருக்கான தோ்வில் வெற்றிபெற்று 16-7-2021முதல் தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலராக பயிற்சி பெற்றவா்.

புதன்கிழமை பொறுப்பேற்ற சங்கீதா சின்னராணியிடம், மாவட்ட கல்வி அலுவலா் பொறுப்பிலிருந்த செந்தூா்பாண்டியன் பொறுப்புகளை ஒப்படைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.