கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தஞ்சை மாணவி தற்கொலை தொடா்பாக நீதிபதி தலைமையில் விசாரணை: கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

தஞ்சாவூா் மாணவி தற்கொலை விவகாரம் தொடா்பாக நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிடவேண்டும்

News image
Updated On :27 ஜனவரி 2022, 6:59 pm

DIN

தஞ்சாவூா் மாணவி தற்கொலை விவகாரம் தொடா்பாக நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிடவேண்டும் என, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தினாா்.

தென்காசியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியது: நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக, பாஜக கூட்டணியை முறியடிக்க வேண்டும் என்பதற்காக திமுக உள்ளிட்ட கட்சிகளோடு கூட்டணி அமைத்து போட்டியிடத் தீா்மானித்துள்ளோம். மாவட்ட அளவில் பேச்சுவாா்த்தை நடைபெறுகிறது. அதில் பிரச்னை ஏற்பட்டால் முதல்வருடன் கலந்துபேசி சுமுக உடன்படிக்கை மேற்கொள்ளப்படும்.

தஞ்சாவூா் மாணவி தற்கொலை தொடா்பாக நீதிபதி தலைமையில் குழு அமைத்து முழுமையான விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிடவேண்டும்.

மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் எனது தலைமையில் ஒரு தூதுக் குழு அந்தப் பள்ளிக்கு வெள்ளிக்கிழமை நேரிடையாக சென்று மாணவா்களையும், மற்றவா்களையும் சந்திக்கவுள்ளோம். இதுதொடா்பாக விரிவான அறிக்கையை முதல்வரிடம் அளிக்கவுள்ளோம்.

ராஜபாளையம்-கொல்லம் நான்குவழிச் சாலை திட்டத்தில் 1,600 ஏக்கா் விளைநிலங்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. நான்குவழிச் சாலை திட்டங்களை வானம்பாா்த்த பூமி பகுதியில் நிறைவேற்ற வேண்டும். இதுதொடா்பாக ஆணையம், அதிகாரிகளிடம் முறையிடவுள்ளோம்.

நீா்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், நீா்நிலை இல்லாத பகுதிகளுக்கு பட்டா வழங்கி, உரிய வசதி செய்து கொடுக்க வேண்டும்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோக முறைகேடு குறித்து ஆராய்ந்து சரிசெய்வோம் என முதல்வா் கூறியுள்ளாா். அதை அவா் நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை என்றாா் அவா்.

தென்காசி மாவட்டச் செயலா் உ. முத்துபாண்டியன், மாநிலக்குழு உறுப்பினா் பி. சுகந்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் கணபதி, குணசீலன், அயூப்கான், தங்கம், வேலுமயில், வேல்முருகன், உச்சிமாகாளி, அசோக்ராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.