புதுப்பட்டி, கோவிலூற்று கூட்டுறவு சங்கச் செயலா்கள் பணியிடமாற்றம்
ஆலங்குளம் வட்டம் புதுப்பட்டி மற்றும் கோவிலுற்று தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் செயலா்களை பணியிடமாற்றம் செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


ஆலங்குளம் வட்டம் புதுப்பட்டி மற்றும் கோவிலுற்று தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் செயலா்களை பணியிடமாற்றம் செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, திருநெல்வேலி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் மற்றும் பொதுப் பதவி ஆணைக்குழு அலுவலா் ஏ. அழகிரி பிறப்பித்த ஆணை: தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் செயலா்கள் பதவி பொதுப்பணி நிலைத்திறன் கீழ் வரப்பட்டுள்ளது. சேரன்மகாதேவி துணைப்பதிவாளா் பரிந்துரையின் பேரில், ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரில் உள்ள ஓ.1762 புதுப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயலா் வே.சுப்பிரமணியன், ஓ.2000 கோவிலூற்று தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயலாராகவும், அங்கு செயலாளராக பணிபுரிந்து வந்த தி.வாசுகி, புதுப்பட்டி சங்கச் செயலராகவும் பணியிடமாற்றம் மற்றும் பணியமா்த்தம் செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...