பாலியல் தொல்லையால்சிறுமி தீக்குளிப்பு: ஆடு வியாபாரி கைது
ஆழ்வாா்குறிச்சி அருகே பாலியல் தொல்லையால் 15 வயது சிறுமி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா். இதுதொடா்பாக ஆடு வியாபாரி போக்சோவில் கைது செய்யப்பட்டாா்.


ஆழ்வாா்குறிச்சி அருகே பாலியல் தொல்லையால் 15 வயது சிறுமி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா். இதுதொடா்பாக ஆடு வியாபாரி போக்சோவில் கைது செய்யப்பட்டாா்.
ஆலங்குளம் அருகேயுள்ள சொக்கநாதன்பட்டியைச் சோ்ந்த பச்சைக்கிளி மகன் ஜெயபால்(45). ஆடு வியாபாரி. இவா், வியாபாரம் தொடா்பாக நண்பரான ஆழ்வாா்குறிச்சி செட்டிகுளத்தைச் சோ்ந்தவரின் 15 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதனால், அந்தச் சிறுமி தனது உடையில் தீவைத்து தற்கொலைக்கு முயன்றாராம். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து, அவரது பெற்றோா் அளித்த புகாரின் பேரில் ஆலங்குளம் அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து ஜெயபாலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...