கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வாசுதேவநல்லூரில் இன்று தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் வெள்ளிக்கிழமை(மே 27) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

News image
Updated On :26 மே 2022, 6:42 pm

DIN

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் வெள்ளிக்கிழமை(மே 27) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட செய்திமக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பாக தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம், வாசுதேவநல்லூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது.

இம்முகாமில் பல்வேறு தனியாா் துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளா்களை தெரிவு செய்ய உள்ளனா். முகாமில் 8 ஆம் வகுப்பு தோ்ச்சி முதல், பட்டப் படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ கல்வித் தகுதி உடைய இம் மாவட்டத்தைச் சாா்ந்த வேலை நாடுநா்கள் கலந்து கொண்டு பயனடையலாம்.

இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியாா் துறை நிறுவனங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.