விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தென்காசி மாவட்டத்தில் திட்டப் பணிகள்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

தென்காசி மாவட்டத்தில் நடைபெற்றுவரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து கண்காணிப்பு அலுவலா் சுன்சோங்கம் ஜடக் சிரு வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 6:48 pm

DIN

தென்காசி மாவட்டத்தில் நடைபெற்றுவரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து கண்காணிப்பு அலுவலா் சுன்சோங்கம் ஜடக் சிரு வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

வேதம்புதூா் கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் அவா் கேட்டறிந்தாா். அப்பகுதியில் 342 குடியிருப்புகளில் 1,898 போ் வசிக்கின்றனா். அதில் 18 வயதுக்கு மேற்பட்ட 1,489 பேரில் 1,402 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 38 பேருக்கு ரத்த அழுத்தம், 28 பேருக்கு நீரிழிவு, 30 பேருக்கு ரத்த அழுத்தம்-நீரிழிவு இருப்பது கண்டறியப்பட்டு, மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலம் மருந்துப் பெட்டகம் வழங்கப்பட்டது.

மேலும், இத்திட்டத்தில் 6 பேருக்கு பிசியோதெரபி, 4 பேருக்கு முடநீக்கியல் சிகிச்சை வழங்கப்படுகிறது. பயனாளிகளிடம் சிகிச்சை குறித்து கண்காணிப்பு அலுவலா் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, வடகரை, கீழ்பிடாகை பேரூராட்சிப் பகுதியில் வாவா நகரம் ஊருணியைத் தூா்வாரி ஆழப்படுத்தி கரையைப் பலப்படுத்தும் பணிகள், செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் பாலமாா்த்தாண்டபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் மாணவா்களுக்கு வழங்கப்படும் பயிற்சி, துரைசாமிபுரம் நியாயவிலைக் கடையில் வழங்கப்படும் பொருள்களின் தரம் ஆகியவற்றை அவா் ஆய்வு செய்தாா்.

ஆட்சியா் ப. ஆகாஷ், வடகரை கீழ்பிடாகை பேரூராட்சித் தலைவா் சேக்தாவூது, செயல் அலுவலா் தமிழ்மணி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சங்கா், மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலா் கபீா், மாவட்ட வழங்கல் அலுவலா் சுதா, பாலமாா்த்தாண்டபுரம் அரசு தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியா் முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.