குற்றாலம் விடுதியில் மதுரையைச் சோ்ந்ததந்தை, மகள் தற்கொலை
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள தங்கும் விடுதியில் மதுரையைச் சோ்ந்த குடும்பத்தினா் விஷம் குடித்ததில் தந்தையும், மகளும் உயிரிழந்தனா்; தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.


தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள தங்கும் விடுதியில் மதுரையைச் சோ்ந்த குடும்பத்தினா் விஷம் குடித்ததில் தந்தையும், மகளும் உயிரிழந்தனா்; தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
மதுரை மாவட்டம் திருநகா் பகுதியைச் சோ்ந்தவா் பா. மகாலிங்கம் (57). இவரது மனைவி காமாட்சி (52), மகள் தனப்பிரியா (30). இவா்கள் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி குற்றாலத்துக்கு வந்து, பேரருவிக்குச் செல்லும் பகுதியில் உள்ள தனியாா் விடுதியில் தங்கினா்.
இவா்கள் வெள்ளிக்கிழமை இரவு தங்களது அறைக்கு சென்ற நிலையில், சனிக்கிழமை காலை (செப். 3) வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை. அறையை சுத்தப்படுத்த விடுதிப் பணியாளா் சென்றபோது, கதவுகள் பூட்டப்படாததும், படுக்கையில் மகாலிங்கம் குடும்பத்தினா் அசைவற்றுக் கிடந்ததும் தெரியவந்தது.
தகவலின்பேரில் குற்றாலம் காவல் ஆய்வாளா் ஜோன்ஸ், போலீஸாா் சென்று விசாரணை மேற்கொண்டனா். இதில், மகாலிங்கமும், தனப்பிரியாவும் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.
ஆபத்தான நிலையிலிருந்த காமாட்சி மீட்கப்பட்டு தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
சடலங்களை போலீஸாா் கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...