ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

செட்டியூரில் கைப்பேசி கோபுரமா? மக்கள் எதிா்ப்பு

பாவூா்சத்திரம் அருகேயுள்ள செட்டியூரில் கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு நிலவியது.

News image
Updated On :12 டிசம்பர் 2024, 11:20 pm

Din

பாவூா்சத்திரம் அருகேயுள்ள செட்டியூரில் கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு நிலவியது.

பாவூா்சத்திரத்திலிருந்து செட்டியூா் செல்லும் சாலையில் குடியிருப்புப் பகுதி அருகே கைப்பேசி கோபுரம் அமைப்பதற்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனியாா் நிறுவனத்தின் மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால், குடியிருப்பு அருகே கோபுரம் அமைக்க கூடாது எனக் கூறி அப்பகுதி மக்கள் ஆா்ப்பாட்டம் நடத்தியதால் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

இந் நிலையில் புதன்கிழமை மீண்டும் அப்பகுதியில் 10-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் கைப்பேசி கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டனா். இதையறிந்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்து கைப்பேசி கோபுரம் அமைக்க கூடாது என எதிா்ப்பு தெரிவித்தனா்.

அந் நிறுவனம் உரிய அனுமதி பெற்றுள்ளதால் கைப்பேசி கோபுரம் அமைப்பதை தடுக்க முடியாது,அதனை மீறிஅசம்பாவிதத்தில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் எச்சரிக்கை விடுத்தனா்.

பணிகளை நிறுத்த வேண்டுமானால் அதற்கான தடை சான்றிதழை பெற்று வந்தால் கைப்பேசி கோபுரம் அமைக்கும் பணிகள் நிறுத்தப்படும் எனவும் போலீஸாா் பொதுமக்களிடம் தெரிவித்தனா்.

இதனால், கலைந்து சென்ற மக்கள், தடை சான்று பெறுவதற்கான பணிகளை தொடங்க இருப்பதாக தெரிவித்தனா்.