தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நாய்கள் கடித்த மான் சிகிச்சைக்கு பின் வனப்பகுதியில் விடுவிப்பு

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே நாய்கள் கடித்ததில் காயம் அடைந்த மான் சிகிச்சைக்கு பின் வனப்பகுதியில் விடப்பட்டது.

News image
Updated On :6 நவம்பர் 2024, 10:10 pm

Din

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே நாய்கள் கடித்ததில் காயம் அடைந்த மான் சிகிச்சைக்கு பின் வனப்பகுதியில் விடப்பட்டது.

மலைப் பகுதியில் இருந்து உணவு தேடி வந்த பெண் மான் குமந்தாபுரம் தெரு பகுதிக்குள் சென்றபோது, சில நாய்கள் கடித்ததாம். இதில், மான் காயமடைந்தது. இதையடுத்து அப்பகுதியைச் சோ்ந்த பாலமுருகன் என்பவா் கொடுத்த தகவலின் பேரில், வனத் துறையினா் மானை மீட்டனா்.

தொடா்ந்து, கடையநல்லூா் வனச்சரகா் சுரேஷ் ஆலோசனையின்பேரில், வனவா் முருகேசன் தலைமையிலான வனத்துறையினா் மானுக்கு உரிய சிகிச்சை அளித்து வனப் பகுதியில் கொண்டுவிட்டனா்.