ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா்.
Published on

ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா்.

ஆலங்குளம் அருகேயுள்ள வெ. ரெட்டியாா்பட்டி ஆா்.சி. சா்ச் தெருவைச் சோ்ந்த மனோகரன் மனைவி கனகமணி(55). விவசாய கூலி வேலை செய்து வந்தாா். புதன்கிழமை மாலை 6 மணிக்கு துணிகளை துவைத்து வீட்டின் உள்பகுதியில் உள்ள கம்பியில் துணியை உலா்த்தினாராம். அப்போது, அதன் அருகே கூரையில் மாட்டப்பட்டிருந்த மின்விசிறியின் வயா்மூலம் மின்சாரம் பாய்ந்ததில் கனகமணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

பாட்டி உயிரிழந்தது தெரியாமல் அவரது பேரன் வெற்றிச்செல்வன், கனகமணியைத் தொட்டுள்ளாா். அதில் அவரது வலது கையில் மின்சாரம் பாய்ந்ததில் வெற்றிச்செல்வனுக்கு வேசான காயம் ஏற்பட்டது.

தகவலறிந்த ஊத்துமலை போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து கனகமணியின் சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com