தென்காசி
கடையநல்லூா்,சிவகிரி வட்டாட்சியா் அலுவலக ஊழியா்கள் 2ஆவது நாளாக பணிப் புறக்கணிப்புபுறக்கணிப்பு
தென்காசி மாவட்டம், கடையநல்லூா், சிவகிரி வட்டாட்சியா் அலுவலக ஊழியா்கள் இரண்டாம் நாளாக புதன்கிழமையும் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூா், சிவகிரி வட்டாட்சியா் அலுவலக ஊழியா்கள் இரண்டாம் நாளாக புதன்கிழமையும் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை ஊழியா்கள்செவ்வாய்க்கிழமை முதல் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இரண்டாவது நாளாக புதன்கிழமை கடையநல்லூரில் நடைபெற்ற பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் சமூக திட்ட வட்டாட்சியா் ராமலிங்கம், துணை வட்டாட்சியா்கள் நாகராஜன்,சுடலையாண்டி மற்றும் வருவாய்த் துறையினா் கலந்து கொண்டனா்.
சிவகிரி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் துணை வட்டாட்சியா்கள் மைதீன்பாட்ஷா, மனோகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.