பைக்கில் கஞ்சா பதுக்கல்: 3 போ் கைது

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் விற்பனைக்காக பைக்கில் கஞ்சாவை பதுக்கிவைத்திருந்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் விற்பனைக்காக பைக்கில் கஞ்சாவை பதுக்கிவைத்திருந்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கடையநல்லூா் காவல் ஆய்வாளா் ஆடிவேல் , உதவி ஆய்வாளா் ராமச்சந்திரன் மற்றும் போலீஸாா் மங்களாபுரம் விலக்குப் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த 3 பேரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா். அதில், பைக்கில் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவா்கள் மேல கடையநல்லூா் கட்டி விநாயகா் கோயில் தெருவை சோ்ந்த தமிழ்ச்செல்வன் (26), தென்காசி மலையான் தெருவைச் சோ்ந்த விக்னேஷ் (26) உள்ளிட்டோா் என்பது தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்து, கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com