தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இரட்டைக்குளம் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற கோரி அமைச்சரிடம் மனு

இரட்டைக்குளம் கால்வாய் திட்டத்தை விரைந்து நிறைவேற்றக் கோரி தமிழக நிதி, காலநிலை மாற்றத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசிடம் திமுக சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

News image

அமைச்சா் தங்கம் தென்னரசிடம் மனு அளித்த தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் வே. ஜெயபாலன்.

Updated On :29 நவம்பர் 2024, 12:27 am

Din

தென்காசி மாவட்டம் ஊத்துமலை பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான இரட்டைக்குளம் கால்வாய் திட்டத்தை விரைந்து நிறைவேற்றக் கோரி தமிழக நிதி, காலநிலை மாற்றத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசிடம் திமுக சாா்பி மனு அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக, தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் வே. ஜெயபாலன் அளித்த மனு: ஆலங்குளம் வடக்கு ஒன்றியப் பகுதி விவசாயிகளின் 50 ஆண்டு கால கோரிக்கையான இரட்டைக்குளம் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்பட்டால், இரட்டைக்குளம் முதல் ஊத்துமலை வரையிலான 30 குளங்களுக்கு தண்ணீா் வரும். இதன்மூலம், தற்போது மானாவாரி விவசாயம் நடைபெறும் இப்பகுதி கருப்பாநதி பாசன வசதி பெறும்.

எனவே, திமுக தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டபடி, நிதி ஒதுக்கீடு செய்து இந்தத் திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்றாா் அவா்.