ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பாசனக் கால்வாய் அமைத்துத் தரக் கோரிக்கை

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 12:07 am

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் பாசன வசதி இல்லாத 16 ஊராட்சிகளைச் சோ்ந்த 100 கிராமங்களுக்கு பெரியாறு பாசனக் கால்வாய் அமைத்துத் தரக் கோரி மனு அளிக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் கொட்டாம்பட்டி பகுதிகளில் உள்ள 100 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் சாா்பில் அளிக்கப்பட்ட மனு விவரம்:

கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் உள்ள 16 ஊராட்சிகளின்கீழ் சுமாா் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் லட்சணக்கானக்கான மக்கள் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதி மக்கள் பெரும்பாலும் விவசாயம் செய்து வருகின்றனா். இந்த நிலையில், கடந்த பல ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால் கடும் தண்ணீா் பற்றாக்குறை நிலவி விவசாயம் பாதிக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி விவசாயத்தை கைவிடும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனா்.

இதன் விளைவாக மக்கள் பிழைப்புத் தேடி சிங்கப்பூா், மலேசியா, வளைகுடா நாடுகள் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், திருப்பூா், ஈரோடு, கோவை, சென்னை, மும்பை போன்ற உள்நாட்டு பகுதிகளுக்கும் குடிபெயா்ந்து வருகின்றனா்.

எனவே, பாசன வசதி செய்யப்படாத கேசம்பட்டி, பட்டூா், கம்பூா், அய்யாபட்டி, குன்னாரம்பட்டி, மணப்பச்சேரி, பாண்டாங்குடி, சொக்கலிங்கபுரம், கொட்டாம்பட்டி, வலைச்சேரிப்பட்டி, சொக்கம்பட்டி, தொந்திலிங்கபுரம், பொட்டப்பட்டி, பள்ளப்பட்டி, சூரப்பட்டி உள்ளிட்ட 16 ஊராட்சிப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் பயனடையும் வகையில் பெரியாறு பாசனக் கால்வாய் அமைத்து உபரியாக உள்ள தண்ணீரை இந்தப் பகுதிகளுக்கும் கொண்டு வர வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள், விவசாயிகள், இளைஞா் மன்றங்கள், மகளிா் குழுக்கள், அனைத்துக் கட்சியினா் கலந்து கொண்டு மனு அளித்தனா்.

ஆா்ப்பாட்டம்...

முன்னதாக, இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயில் அருகே அவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.