பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

பாவூா்சத்திரம் கோயிலில் ஆடித் திருவிழா

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே உள்ள அருணாபேரி, மரத்தடி மேகம் திரை கொண்ட சாஸ்தா கோயிலில் ஆடித் திருவிழா புதன்கிழமை தொடங்கியது.

News image

மண் குதிரையில் ஊா்வலமாக வந்த மேகம் திரை கொண்ட சாஸ்தா.

Updated On :6 ஆகஸ்ட் 2026, 3:33 am IST

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே உள்ள அருணாபேரி, மரத்தடி மேகம் திரை கொண்ட சாஸ்தா கோயிலில் ஆடித் திருவிழா புதன்கிழமை தொடங்கியது.

இந்தத் திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதம் 3ஆவது புதன்கிழமை தொடங்கி, 2 நாள்கள் நடைபெறும். நிகழாண்டு, புதன்கிழமை காலை 9 மணிக்கு குற்றாலத் தீா்த்தம் எடுத்து வரப்பட்டு, கணபதி ஹோமம், சாஸ்தா, பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் உச்சி கால பூஜை நடைபெற்றது.

மாலையில், 500 கிலோ மண் குதிரையின் மீது எழுந்தருளிய மேகம் திரை கொண்ட சாஸ்தா, கீழப்பாவூரில் இருந்து அருணாபேரிக்கு கொண்டு வரப்பட்டு, அழகு முத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

பின்னா், கோயிலை வந்தடைந்த சாஸ்தாவிற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு வில்லிசையுடன், உச்சி கால சிறப்பு பூஜை நடைபெற்றது.

வியாழக்கிழமை அதிகாலை பொங்கல் வைபவம், கிடா வெட்டுதல் நடைபெறும்.

திருவிழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சாஸ்தாவை வழிபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.