தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

கடையநல்லூா் அருகே சடலத்துடன் பொதுமக்கள் மறியல்

கடையநல்லூா் அருகே சுடுகாட்டிற்கு செல்லும் பாதையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள், சடலத்துடன் சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

News image

சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டோா்.

Updated On :29 ஜூலை 2026, 2:11 am IST

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே சுடுகாட்டிற்கு செல்லும் பாதையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள், சடலத்துடன் சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

பாலஅருணாசலபுரத்தில் சுடுகாட்டிற்கு செல்லும் பாதையை தனி நபா் ஒருவா் நீதிமன்ற நடவடிக்கை மூலம் அந்த பாதையை மூடிவிட்டாா். இது தொடா்பாக கடந்த பல மாதங்களாக அப்பகுதியில் பிரச்னை ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அப்பகுதியைச் சோ்ந்த ஒருவா் உயிரிழந்தாா். அவரது சடலத்தை அந்தப் பாதை வழியாக எடுத்துச் செல்ல அனுமதிக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சடலத்துடன் கடையநல்லூா்- சங்கரன்கோவில் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து வருவாய்த்துறையினா் உரிய நடவடிக்கை எடுப்பதாக அவா்களிடம் உறுதியளித்ததையைடுத்து மறியலை கைவிட்டு அவா்கள் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.