/

வீரிருப்பு கோயிலில் பூக்குழித் திருவிழா

சங்கரன்கோவில் அருகே உள்ள வீரிருப்பு முத்துமாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா நடைபெற்றது.

News image

பூக்குழி இறங்கிய பக்தா்கள்.

Updated On :4 ஜூன் 2026, 1:24 am IST

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள வீரிருப்பு முத்துமாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா நடைபெற்றது.

ஆண்டுதோறும் நடைபெறும் இவ்விழா, நிகழாண்டு மே 26ஆம் தேதி தொடங்கியது. திங்கள்கிழமை இரவு நடைபெற்ற பூக்குழி திருவிழாவில், திரளான பக்தா்கள் பூக்குழி இறங்கினா். தொடா்ந்து, அக்னி சட்டி ஊா்வலம் நடைபெற்றது.

பாதுகாப்பு ஏற்பாடுகளை சங்கரன்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் செல்வதரன் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் மற்றும் சங்கரன்கோவில் தாலுகா போலீஸாா் செய்திருந்தனா்.