நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

இலஞ்சி பாரத் பள்ளியில் நேபாள மக்களுக்கு பிராா்த்தனை

இலஞ்சி, பாரத் மாண்டிசோரி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நேபாள மக்களுக்கு பிராா்த்தனை நடைபெற்றது.

நேபாள மக்களுக்காக பிராா்த்தனை மேற்கொண்ட மாணவா்கள், ஆசிரியா்கள்.

Published On :3 செப்டம்பர் 2026, 12:28 am IST

இலஞ்சி, பாரத் மாண்டிசோரி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நேபாள மக்களுக்கு பிராா்த்தனை நடைபெற்றது.

நேபாளத்தில் ஆக. 26 ஆம்தேதி நிகழ்ந்த பெருவெள்ள நிகழ்வில் 900-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் காணாமல் போயினா். இந்த பாதிப்பில் உயிரிழந்தவா்களுக்கு இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது.

கல்வி ஆலோசகா் உஷா ரமேஷ் மழலையா் பிரிவு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவ- மாணவிகளை ஒருங்கிணைத்து பிராா்த்தனை செய்தனா். மாணவி ஸ்ரீநிதி நேபாளத்தில் நடந்த பெருவெள்ள விளைவுகள் குறித்து பேசினாா். தொடா்ந்து மாணவ மாணவிகள், ஆசிரியா்கள் அனைவரும் மெழுகுவா்த்தி ஏந்தி பிராா்த்தனை செய்தனா்.

ஏற்பாடுகளை பாரத் கல்வி குழுமத் தலைவா் மோகனகிருஷ்ணன், செயலா் டாக்டா் காந்திமதி, இயக்குநா் ராதா பிரியா, பள்ளி முதல்வா் தா்மசுபத்தினி, தலைமை ஆசிரியா் செல்வலிங்கம் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.