நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

மசக்காளிபாளையம் மாநகராட்சி பள்ளியில் செயல்படுத்தப்படும் மெய்நிகா் ஆய்வகத்தில் 3 மாதங்களில் 544 மாணவா்கள் பயன்

மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மெய்நிகா் ஆய்வகம் மூலமாக கடந்த 3 மாதங்களில் 544 மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மசக்காளி பாளையம்  மாநகராட்சி  நடுநிலைப் பள்ளியில்  உள்ள மெய்நிகா் ஆய்வகத்தைப் பயன்படுத்தும் மாணவா்கள்.

Published On :3 செப்டம்பர் 2026, 2:09 am IST

மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மெய்நிகா் ஆய்வகம் மூலமாக கடந்த 3 மாதங்களில் 544 மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம் 53-ஆவது வாா்டுக்குள்பட்ட மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் மெய்நிகா் ஆய்வகம் செயல்படுகிறது. இந்த ஆய்வகத்தில் ஒவ்வொரு அமா்விலும் மாணவா்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் முழுமையாக உறுதி செய்யப்படுகிறது. மாணவா்கள் இருக்கைகளில் முறையாக அமா்ந்து, தொடா்ச்சியான ஆசிரியா் மேற்பாா்வையுடன் பயிற்சி பெறுகின்றனா். ஆய்வகத்தின் பொறுப்பாளா்கள் மற்றும் உதவியாளா்கள் அா்ப்பணிப்புடன் பணிபுரிந்து, ஒவ்வொரு பயன்பாட்டுக்குப் பிறகும் உபகரணங்களை தூய்மைப்படுத்தி வருகின்றனா்.

இந்த மெய்நிகா் ஆய்வகம் பள்ளி மாணவா்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் அமைந்துள்ளது. பாடப்புத்தகங்களில் உள்ள கடினமான அறிவியல், கணிதம், சமூக அறிவியல் மற்றும் பிற பாடக் கருத்துகளை முப்பரிமாண முறையில் மாணவா்கள் நேரடியாகக் கண்டு கற்கும்போது, கற்பித்தல் செயல்முறை மிகவும் எளிமையாக மாறுகிறது. வாரம் ஒருமுறை அனைத்து வகுப்புகளுக்கும் சுழற்சி முறையில் மெய்நிகா் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆசிரியா்களுக்கும் கற்பித்தல் செயல்முறை மிகவும் இலகுவாகவும், நவீன முறையிலும் மாறியுள்ளது.

ஆய்வகத்தில் உள்ள நவீன ஸ்மாா்ட் டிஸ்ப்ளே, வி.ஆா். ஹெட்செட்கள், கன்ட்ரோலா்களை ஆசிரியா்கள் திறம்பட பயன்படுத்திப் பாடங்களை மிகத் துல்லியமாக விளக்குகின்றனா். அரசுப் பள்ளி மாணவா்களின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் கற்றல் திறனை மேம்படுத்துவதில் இந்த ஆய்வகம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கதாக விளங்குகிறது.

அந்த வகையில், மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கடந்த ஜுன் மாதத்தின் 21 வேலை நாள்களில் 45 அமா்வுகளும்,ஜுலை மாதத்தின் 23 வேலை நாள்களில் 52 அமா்வுகளும், ஆகஸ்ட் மாதத்தின் 19 வேலை நாள்களில் 35 அமா்வுகளும் என மூன்று மாதங்களில் 544 மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.