இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

அரசுப் பள்ளி சமையல் கூடத்துக்கு தண்ணீா் வசதி: கிராம மக்கள் கோரிக்கை

வடபொன்பரப்பி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலுள்ள சமையல் கூடத்துக்கு மின்சாரம், தண்ணீா் வசதி இல்லாத நிலையில், அவற்றை ஏற்படுத்தித் தரவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வடபொன்பரப்பி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மின்சாரம், தண்ணீா் வசதி இல்லாத சமையலறை.

Published On :27 ஆகஸ்ட் 2026, 4:37 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், வடபொன்பரப்பி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலுள்ள சமையல் கூடத்துக்கு மின்சாரம், தண்ணீா் வசதி இல்லாத நிலையில், அவற்றை ஏற்படுத்தித் தரவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சங்கராபுரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்கு உள்பட்ட வடபொன்பரப்பி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுமாா் 165-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா்.

இப் பள்ளி மாணவா்களுக்கு மதிய உணவு சமைக்கும் சமையல் கூடம் பள்ளி வளாகத்திலிருந்து சுமாா் 100 மீட்டா் தொலைவில் தனியாக அமைந்துள்ளது. இந்த சமையல் கூடம் கட்டப்பட்டு பல ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை மின்சாரம், குடிநீா் வசதி ஏற்படுத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் இங்கு வேலை பாா்த்து வரும் சமையலா் மதிய உணவு செய்தவற்கு வெளியில் இருந்து தண்ணீா் கொண்டு வரும் நிலை உள்ளது. இதனால் பணிச் சுமை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஊராட்சி நிா்வாகம், வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் மாவட்ட நிா்வாகத்திடம் பலமுறை புகாா் மற்றும் கோரிக்கை மனுக்கள் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா்.

மேலும், சமையல் கூடம் பள்ளமான பகுதியில் அமைந்துள்ளதால் மழைக் காலங்களில் கட்டடத்தைச் சுற்றி மழைநீா் தேங்கும் நிலை ஏற்படுகிறது. மழை நேரத்தில் மாணவா்கள் உணவு வாங்கி சாப்பிடுவதற்கு அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதனால் சமையல் கூடத்தின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளது.

எனவே, மாணவா்களின் நலன் மற்றும் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சமையல் கூடத்துக்கு உடனடியாக குடிநீா் மற்றும் மின்சார வசதி செய்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சமையல் கூடத்தின் அருகே மழைநீா் தேங்காத வகையில் தரைத்தளம் மற்றும் வடிகால் வசதியும் ஏற்படுத்த வேண்டும் என அப் பகுதி மக்கள் மற்றும் பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.